சில தினங்களுக்கு முன்னாள் கீதை பிறந்த நாளைக் குறிக்கும் வாயில் ஆன்மிக அமைப்பு ஒன்று நடத்திய விழாவில் பேசிய மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தேசிய நூலான பகவத் கீதையை தேசிய நூல் என மத்திய அரசு அறிவிப்பது மட்டுமே எஞ்சியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பேச்சால் ஏதோ மத்திய அரசு பகவத்கீதையை தேசிய நூல் என அங்கீகரித்து அரசு ஆணையே பிறப்பித்துவிட்டது போலவும் வானமே இடிந்து இவைகள் தலையில் விழுந்து விட்டது போலவும் இங்கிருக்கும் திமுக தலைவரும் பாமக தலைவரும் கூக்குரலிடுகின்றனர்.

ஹிந்துக்களுக்கு எதிராக கொடி பிடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிற இவர்களது கூக்குரலை நாம் கண்டுகொள்ள வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் இந்த அறிவிப்பினால் ஹிந்துக்களுக்கு இப்போது இருக்கும் கௌரவம் கூட்டவும் போவது இல்லை, இந்த அறிவிப்பைச் சிலர் எதிர்ப்பதால் ஹிந்துக்களின் கௌரவம் குறையப் போவதும் கிடையாது.

 பகவத்கீதையை தேசிய நூல் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள இந்தத் தருணத்தில் அது விஷயமாக சில தகவல்களைப் பார்ப்போம்.

நமது ஹிந்து சமுதாயத்திற்கு ஆன்மிக வழிகாட்ட வந்த வேதாந்த ஆசார்யர்கள் மூவருமே பகவத்கீதைக்கு பாஷ்யம் எழுதியுள்ளனர். விடுதலை போராட்ட காலத்தில் மக்களை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடச் செய்வதற்கு பகவத்கீதைதான் சரியான உத்வேகம் தரமுடியும் என்று கருதி லோகமான்ய பாலகங்காதர திலகரும் மகாத்மா காந்தியும் மஹாகவி பாரதியும் ஆசார்ய வினோபாஜியும் நவீன பாஷ்யங்கள் எழுதினர்.

டாக்டர் அன்னிபெசன்ட்டும், அரவிந்தரும் சிலாகித்துப் போற்றிய நூல் பகவத்கீதை.

உபநிஷதங்களிலிருந்து தேர்ந்தெடுக்க மலர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பூச்செண்டு பகவத்கீதை என்று சொன்னார் விவேகானந்தர்.

உலகில் எந்த ஒரு மொழியிலும் பகவத்கீதைக்கு இணையான ஒரு நூல் இல்லவே இல்லை என்று மதன் மோகன் மாளவியா அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

ஆன்மிக உண்மைகளை இத்தனை தெளிவாகக் கூறும் தத்துவ நூல் பகவத்கீதை ஒன்றைத் தவிர வேறில்லை என்று ஆல்டஸ் ஹக்ஸ்லீ கூறியுள்ளார்.

அமெரிக்காவிலிருந்த பெரிய ஞானியாகிய எமர்சன் என்பவர் தம் மேஜையின் மேல் எப்போதும் பகவத்கீதை பிரதி ஒன்றை வைத்திருந்தார்.
(தேசத்தின் புத்தகம் கீதை: பாரதத்தில் தோன்றியுள்ள இந்த பகவத்கீதையை தான் நமது தேசத்தின் நூல் என்று நமது அரசு நமது தேசத்திற்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களுக்கு அளித்து வந்துள்ளது. இப்போதும் அளித்து வருகிறது.

ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து இன்றுவரை இது தொடர்ந்து வருகிறது. அந்த மரபின்படிதான் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் ஜப்பானுக்கு சென்றபோது ஜப்பானிய அரசருக்கு பகவத்கீதையைப் பரிசாகத் தந்தார். அமெரிக்காவிற்குச் சென்றபோது ஒபாமாவிற்கு பகவத்கீதையைப் பரிசாகத் தந்தார்.

கம்யூனிஷ்டுத் தலைவர்களில் ஒருவரான நம்பூதிரிபாடு வாடிகன் தேசத் தலைவர் போப்பிற்கு பகவத்கீதையைப் பரிசாக அளித்தார். ஆக திராவிட இயக்கத் தலைவர்கள் என்ன புலம்பினாலும் பகவத்கீதையின் பெருமை குறையப் போவதில்லை.

நமது மத்திய அரசு பைபிளையோ குரானையோ யாருக்கும் பரிசாகத் தரமுடியாது. ஏனெனில் அவைகள் இந்த தேசத்தில் பிறந்த நூல்கள் அல்ல. இந்த நாட்டின் தேசிய நூல்களில் அவை இடம்பெற முடியாது.நன்றி :-மணியன்)

(உலகத்துக்கு உகந்த கீதை: ஆங்கில மொழியில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கு இந்திய கம்பெனி பாரதத்தை ஆண்டபோது வெளியிடப்பட்டது. அப்போது ஆங்கிலேய அரசாங்கத்தின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஷ் இந்த மொழிபெயர்ப்புக்கு முன்னுரை ஒன்றினை எழுதியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதை நாம் அறிவது நல்லது.

"இங்கிலாந்து ஒரு காலத்தில் பாரத தேசத்தை விட்டு வெளியேறும் நாள் ஒன்று வரலாம். ஆனால் இந்த தேசத்தை நாம் ஆண்ட காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள அறிய பொக்கிஷம் இந்த நூல் என்பதை நாம் மறக்க முடியாது. பாரத தேசத்தில் பிறந்த இந்த பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து அனுஷ்டானத்துக்குக் கொண்டு வருமானால், இங்கிலாந்து என்றைக்கும் மேன்மையுற்று விளங்கும்".

மகாத்மா காந்தியடிகள் ஒருமுறை லண்டன் நகரிலுள்ள மிகப்பெரிய நூலகம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். "அங்குள்ள புத்தகங்களுள் எந்தப் புத்தகம் மக்களால் அடிக்கடி அநேகமுறை வாங்கிப் படிக்கப்பட்டது?" என்று அங்குள்ள நூலகரைக் கேட்டதற்கு, "பகவத் கீதை" என்று அவர் பதில் சொன்னார்.)

("கீதையை எதிர்ப்பவர்களுக்கு ஓட்டு கிடையாது" – யாதவர்கள்: யாதவ மகாசபை தலைவர் தேவநாதன்: அனைத்து ஹிந்துக்களுக்குமான புனித நூல் பகவத்கீதை. அதற்கு மத்திய அரசு உரிய மரியாதைத் தர முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் அதை எதிர்ப்பது சரியல்ல. ஹிந்தி படிக்கவேண்டாம் என கூறி தன் வீட்டுப் பிள்ளைகளை ஹிந்தி படிக்க வைத்தவர் கருணாநிதி. அதனால் அவர் உள்ளொன்றும் வெளியே ஒன்றுமாக செய்பவர்தான். அதனால் அவர் எதிர்ப்பதை ஏற்கக்கூடாது. தொடர்ந்து எதிர்பாரானால் 60 லட்சம் யாதவ ஓட்டுக்களை இழக்க வேண்டியிருக்கும்.

யாதவ சங்கத் தலைவர் தங்கவேல்: கிருஷ்ண பகவான் அருளிய வாழ்வியல் நூலான பகவத்கீதையை ஹிந்துக்கள் புனித நூலாக போற்றுகின்றனர். பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிக்கும் மத்திய அரசின் முயற்சியை வரவேற்கிறோம். புனித நூலான பகவத்கீதையை கொச்சைப் படுத்துவதை யாதவர்கள் ஏற்கமாட்டார்கள். உரிய நேரத்தில் அவர்களுக்கு பாடம் புகட்டப்படும்.

யாதவ மகாசபை பொதுச் செயலர் சிவபெருமான்: தமிழகத்தில் யாதவ மக்களின் ஓட்டுகள் 60 லட்சத்துக்கும் மேல் உள்ளது. அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தால், பகவத்கீதையை எதிர்ப்பவர்கள் கடும் சங்கடத்துக்கு உள்ளாவர்.

நன்றி :-ஆர்.பி.வி.எஸ்.மணியன்

One response to “பகவத் கீதைக்கு எதிர்ப்பு அலட்சியமே அவசியம்”

Leave a Reply