தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் பலமிழந்து வருகிறது. அதேநேரத்தில், பாஜக. மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறிவருகிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக. மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் திருவண்ணா மலையில் செய்தியாளர்களிடம் பேசும் போது, ''தமிழகத்தில், படித்த, நடுத்தர மக்களின் ஆதரவுமட்டுமின்றி, தற்போது விவசாயிகள், கிராமப்புற பெண்கள், இளைஞர்கள் பாஜக.வில் இணைய ஆர்வமாக உள்ளனர். தமிழ்நாட்டில் 10 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் 60லட்சம் உறுப்பினர்களை சேர்க்க திட்ட மிட்டுள்ளோம்.

தமிழ் நாட்டில் பாஜக மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறிவருகிறது. திராவிட கட்சியில் இருந்தவர்களும் பா.ஜ.க.வை நம்பி இணைகிறார்கள். தமிழகத்தில் திராவிடகட்சிகள் பலமிழந்து வருகிறது. பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சிக்குவந்தால் மீனவர் பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காணப்படும்.

திராவிட கட்சிகளால் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த இயலாது. ஆனால் பாஜக. பூரண மது விலக்கை அமல்படுத்த முனைப்புடன் உள்ளது. திருவண்ணா மலை மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு, அரசு அறிவித்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் பாஜக. சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Leave a Reply