பாஜக எம்.பி. சாக்‌ஷி மஹராஜ் தெரிவித்த சர்ச்சைக் குரிய கருத்து, அவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா தேசியசெயலாளர் ஸ்ரீகாந்த் ஷர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி உறுப்பினர்கள் அனை வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடாமல், மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களில் கவனம்செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாக்‌ஷி மஹராஜ், இந்துபெண்கள் நான்கு குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply