மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் அச்சப்படவேண்டிய அவசியமில்லை என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்தார்.

தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து அவர் கூறியதாவது:

மதரீதியாக எழுப்பப்படும் பல்வேறு பிரச்னைகளை கையாள்வதில் மத்திய அரசு மிகுந்தஅக்கறை கொண்டுள்ளது. சிறுபான்மை மக்களை பாதுகாக்கப்போவது பாஜக அரசுதான். எனவே இதுகுறித்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.

சிறுபான்மையினர் நலனுக்கும், பாதுகாப்புக்கும் உறுதியளிக்கும் வகையில் கடந்த சுதந்திரதினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்பட அனைவரும் சிறு பான்மையினரின் பாதுகாப்பு குறித்து உறுதியளித்துள்ளனர்.

பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலும் இந்தவிஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், பாஜக எம்.பி. சாத்வி நிரஞ்சன்ஜோதி, சர்ச்சைக்குரிய வகையில்பேசியது சரியல்ல என்று நான் அவரிடம் நேரடியாகவே தெரிவித்தேன்.

ஹிந்துபெண்கள் 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்சி எம்.பி. சாக்ஷி மகராஜ் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அவரைச் சந்திக்கும்போது இது குறித்து கேட்பேன் என்று ஹெப்துல்லா தெரிவித்தார்.

Leave a Reply