" இந்தியாவில் உங்களுக்காக ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நீங்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்" என்று குஜராத்தில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நூற்றாண்டு விழாவை ஒட்டி குஜராத் மாநிலம் காந்திநகரில் 13-வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியது:

ஒருகாலத்தில் வாழ்வாதாரம் மேம்பட விருப்பத்திற்கு மாறாகவும், துணிவுடனும், புதிய ஆய்வுகளை நடத்தவும் வெளி நாடு செல்லும்படி நம் முன்னோர் கூறினார்கள். ஆனால் இப்போது இந்தியா மிகவலிமையுடன் வளர்ந்து இருக்கிறது. வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக மிகப் பெரிய வாய்ப்புகள் இங்கு காத்திருக்கிறது.

உலகளவில் உள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் நமது மிகப் பெரிய சொத்து என்பது எனது கருத்து. அவர்களை நாம் போற்றிபாதுகாக்க வேண்டும். உலகளவில் நமது பங்கு இருப்பது மிகவும் வலிமையானது. இப்போது உலகம் இந்தியாமீது அன்புடன் கவனம் செலுத்தி வருகிறது.

நான் எனது புதியபொறுப்புகளை ஏற்ற பிறகு 50 நாடுகளின் தலைவர்களை சந்திக்கும்வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களுடன் நாம் வெளிப்படையாக பேசினோம். மிகவும் ஏழ்மையான நாடுமுதல் மிகவும் பணக்கார நாடு வரை இந்தியா மீது கவனம் செலுத்துகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிது.

ஐக்கிய நாடுகள் எனது கோரிக்கையான 'உலக யோகா தினம்' அறிவிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டதில் இருந்து உலகம் இந்தியா மீது வைத்துள்ள அன்பை எடுத்துக்காட்டுகிறது. ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 177 பேர் இதற்கு ஆதரவுதெரிவித்தனர். அதில் 40-க்கும் மேற்பட்டவை இஸ்லாமிய நாடுகள். இந்ததீர்மானம் வெறும் 100 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற தீர்மானங்கள் வழக்கமாக நிறைவேற 2 ஆண்டுகளாவது ஆகும்.

உலகநாடுகள் இந்தியா மீது அன்பு செலுத்துவதற்கு அந்நாடுகளில் உள்ள இந்தியர்களின் செழிப்புகாரணம் அல்ல. ஆனால் அவர்களது பணித்திறன் மற்றும் கலாசாரம், பாரம்பரியம்தான் காரணம். உலக சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு இணையாக இந்தியா நிரூபிக்க வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது.

எப்படி காந்தி தெருக்களை சுத்தம் செய்த போதும், கதர் துணிகளை பிரபலப்படுத்துவது போன்ற மற்ற பல சேவைகளின் மூலம் விடுதலை இயக்கத்துக்கு தலைமை தாங்கி நடத்தி சென்றாரோ அதுபோல, இப்போது இதனை நம்பிக்கையுடன் நிரூபிக்க வேண்டியது நமது பொறுப்பு.

உங்கள் அன்பான இந்தியாவைவிட்டு பல்வேறு உலக நாடுகளுக்கு சென்று அங்கு சிலகாலத்தை கழித்திருக்கிறீர்கள். இப்போது ஏராளமான வாய்ப்புகள் உங்களுக்காக இங்கு காத்திருக்கிறது என நான் உறுதியளிக்கிறேன். காலம் வேகமாக மாறி வருகிறது. இந்தியா புதிய வலிமையுடன் வளர்ந்து இருக்கிறது.

கங்கையை தூய்மைப்படுத்துவதும் உங்களுக்கு மிகவும் விருப்பமானதிட்டம் என்பது எனக்கு தெரியும். இது மிகப் பெரிய மதரீதியான, சுற்றுச் சூழல் மதிப்புமிக்க திட்டம் மட்டுமின்றி, இந்தியாவின் 40 சதவீத மக்களின் பொருளாதார மேம்பாடு சம்பந்தப்பட்டது. நீங்களும் இந்ததிட்டத்தில் இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இல்லையென்றாலும், எங்கள் சொந்தமக்கள் எங்களுக்கு வலிமையை தருவார்கள், எங்கள் வலியில் பங்கெடுப்பார்கள், மகிழ்ச்சியே எங்களுக்கு சக்தியை தரும்.

'இந்திய வம்சாவளி நபர்கள்' மற்றும் 'வெளி நாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர்கள்' என்ற இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைத்து ஒரு அவசரசட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது இரு தரப்பினருக்கும் வாழ் நாள் விசா, போலீஸ் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குபோன்ற பல பலன்களை தரக்கூடியது. எனவே நீங்கள் இந்தியா திரும்ப வேண்டும். அவர்களுக்காக டெல்லியில் ஒரு அலுவலகம் (பிரவசி பாரதீய கேந்திரா) விரைவில் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Leave a Reply