பிரதமர் நரேந்திர மோடி ஒருசிறந்த தலைவர் மற்றும் நல்லமனிதர்,'' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மனதார பாராட்டியுள்ளார்.

இது குறித்து, நீதிபதி தத்து கூறியதாவது:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நான் பதவியேற்றபின், பிரதமர் மோடியை, நான்குமுறை மட்டுமே சந்தித்துள்ளேன். உண்மையில் அவர் ஒருசிறந்த தலைவர். அவரது தலைமையிலான மத்திய அரசு, நீதித் துறையின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.இதுவரை, நீதித் துறையின் செயல்பாட்டில் எவ்வித குறுக்கீடுகளும் வந்ததில்லை. தவிர, நான்பழகிய வரையில், அவர் ஒரு நல்லமனிதர்.என்று அவர் கூறினார்.

அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திக்காத தத்து, பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பிரதமர் மோடியை மனம்திறந்து பாராட்டியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply