திமுக எரிந்து கொண்டிருக்கிற வீட்டின் நிலையில் இருப்பதாகவும், எனவே உயிர் தப்பிக்க தொண்டர்கள் பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திமுக.வை பொறுத்தவரை எரிகிற வீட்டுக்கு சமம். எரிகிற வீட்டில் இருந்து உயிர்தப்பிக்க பலரும் குதித்து ஓடுவார்களே அதேபோல் வெளியேறி கொண்டிருக்கிறார்கள். இந்தநேரத்தில் வீட்டின் உரிமையாளர் போடும் கூச்சல் பொருள் நிறைந்ததாக இருக்குமா?.

மோடியின் மீது மக்கள்வைத்துள்ள நம்பிக்கை நாடுமுழுவதும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே எழுச்சி தமிழகத்திலும் உருவாகி இருப்பதை உணர்ந்த காரணத்தால் ஏற்பட்டவெறுப்பின் வெளிப்பாடுதான் இது. ஒருகாலத்தில் பா.ஜ.க கொடி ஊன்ற விடமாட்டேன் என்றவர் தான் கலைஞர். 1999-ம் ஆண்டு அரசியலில் தங்கள் இடத்தை தக்கவைத்து கொள்ள எங்களோடு கூட்டணி வைத்தார்கள்.

மத்திய மந்திரி சபையிலும் முக்கிய இலாகாக்களை வாங்கினார்கள். அப்போது இனித்தது. மதவாதம் தெரியவில்லை. நான் தனிப்பட்டமுறையில் திமுக. தலைவர்கள் பலரை பல முறை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர்களது கருத்துக்களும், கட்சியின் கருத்துக்களும் எனக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதை எக்காலத்திலும் வெளியேபேச முடியாது. பேசுவது நாகரீகமாகவும் இருக்காது. காங்கிரசுக்கு அரசியல்பிழைப்பு நடத்த மதவாதம் என்ற ஒரே மந்திர சொல்தான் உண்டு. மக்களை பிரித்தாளுவதில் காங்கிரசும், திமுக.வும் கைதேர்ந்தவை என்பதை தமிழகமக்கள் உணர்ந்து விட்டார்கள். இனி இந்த மாயவார்த்தை ஜாலங்கள் மக்களிடம் எடுபடாது. 2004 மற்றும் 2009-ல் காங்கிரசும், திமுக.வும் கூட்டுசேர்ந்தது. அதன் விளைவாக இலங்கையில் தமிழர்களுக்கு அழிவு ஏற்பட்டது. மீண்டும் கூட்டுசேர்ந்தால் தமிழக மக்களை அழிக்கும் திட்டமாகத் தான் அமையும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply