சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் நரேந்திரமோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்நாளில் சுவாமி விவேகானந் தருக்கு சிரம்தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன். அவருடைய எண்ணங்கள், சிந்தனைகளால் நான்மிகவும் கவரப்பட்டுள்ளேன்.

மிகப்பெரும் சிந்தனையாளர்களில் அவரும் ஒருவர். இந்தியாவின் செய்தியை உலகுக்கு எடுத்துச் சென்ற ஒருவழிகாட்டி அவர். அவரது பிறந்த நாளை இளைஞர்கள் தினமாக கொண்டாடும் இந்நாளில், இளைஞர்கள் தலைமையில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்த உறுதியேற்போம் என்று மோடி கூறியுள்ளார்.

Leave a Reply