பாஜக எம்.பி.க்கள் யாரும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிடக் கூடாது என்று சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால், அதை மீறும் வகையில் பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜ் கடந்த 7–ந் தேதி மீரட் நகரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் பேசும் போது, ''இந்து பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்று பேசினார், இது சர்ச்சையை கிளப்பியது

இந்நிலையில் சாக்ஷி மகாராஜ் எம்.பி.க்கு நேற்று பாஜக. தேசிய தலைவர் அமித்ஷா விளக்கம்கேட்டு ஒரு நோட்டீசு அனுப்பியுள்ளார். அதில் அவர், ''சர்ச்சையை உருவாக்கும் வகையில் நீங்கள் பேசியது ஏன்? உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் தாருங்கள்'' என்று கூறியுள்ளார்.

10 நாட்களுக்குள் சாக்ஷி விளக்கம் தரவேண்டும் என்று அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். எனவே சாக்ஷி மகாராஜ் மீது பாஜக ஏதாவது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.

Leave a Reply