அமைதி,ஒற்றுமை,பெண்கள் முன்னேற்றம், இளைஞர் முன்னேற்றம்,வாழ்வாதாரங்ளை காப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆன்மீக குரு ஸ்ரீ எம்,கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைபயணத்தை நேற்று தொடங்கினார்.6 ஆயிரத்து 500 கி.மீட்டர் துரத்தை கடக்கும் அவர் இந்தியாவின் 11 மாநிலங்கள் வழியாக 86 மாவட்டங்கள் வழியாக அவர் 18 மாதங்கள் தொடர்ச்சியாக நடக்கிறார்.

கன்னியா குமரியிலிருந்து, திருவனந்தபுரம்,காஞ்சன்காடு, மைசூர்,புனே,அகமதாபாத், இந்துர்,அலகபாத், வாரனாசி, நியூடெல்லி, பஞ்சாப், அமிர்தசரஸ், வழியாக ஸ்ரீநகர் சென்றடைகிறது.

இந்த யாத்திரையின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.கன்னியாகுமரி கலாச்சாரமையம். இங்கு சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர்ஆகிய மகான்களும்,அன்னை பகவதியம்மன் ஆலயம் அமைந்துள்ள புனித மண்ணில் இருந்து இந்தயாத்திரை தொடங்குகிறது. பி.எஸ்.என்.எல்., ஏராளமான புது புது திட்டங்களைஅறிமுகப்படுத்திவருகிறது. தனியார் நிறுவனங்களுக்கு போட்டிபோடும் அளவுக்கு பி.எஸ்.என்.எல் வளர்ச்சியடைந்து வருகிறது. தொலைதொடர்பு துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. தமிழ்நாட்டில் 200 பஞ்.,களில் ஆப்டிக்கல் பைபர் மூலம் இன்டெர்நெட் இணைப்பு கொடுக்கும் பணி நடந்துவருகிறது.

ஐ.டி.,துறை இந்தியாவில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. சென்னை போன்ற நகரங்களில் இதற்கு நல்ல இடமாக உள்ளது.பெருநகரங்களில் உள்ளது போன்று பி.பி.ஓ.,மற்றும் கால்சென்டர்களை சிறுநகரங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் ஈ.காமர்ஸ் நல்லமுறையில் வளர்ச்சியடைந்துவருகிறது. பி.எஸ்.என்.எல்.,நிறுவனம் தனியார்மயமாகாது. பிரான்ஸ் நாட்டில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்டதாக்குதல் கண்டனக்குரியது. தீவிரவாதம் எந்தவடிவில் வந்தாலும் அதை தடுக்கவேண்டியது ஒவ்வொரு நாட்டின் கடமை மட்டுமல்ல.ஒவ்வொரு தனி மனிதனின் கடமையுமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:

Leave a Reply