இலங்கை அதிபர் தேர்தல், சார்க் நாடுகளில் குறிப்பாக இந்தியாவிற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு…. தேர்தல் வழிமுறைகளும், மிகப் பெரும் ஆச்சரியம், மற்றும் திகில் கதை திடீர் திருப்பங்கள்!

ஜோசியர்களின் பேச்சை நம்பி மகிந்திரா ராஜபஷே தன் பதவி காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன்பே தேர்தலை நடத்தியது… (இந்து மதம் இரண்ய கசிபுகளுக்கு இப்படித்தான் இறுதி நிலை கொண்டு வரும்). "கண்ணுக்கெட்டிய தூரம் எதிரிகளே இல்லை" என்ற ராஜபஷேவிற்கு அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரை 'எதிரி' அவரின் மந்திரி சபைக்குள்ளே இருக்கிறார் என்று தெரியவில்லை.

SLFP மற்றும் UNP கட்சிகளே "வேட்பாளர்" கிடைக்காமல் போட்டியிடாத போது மைதிரிபாலா ஸ்ரீசேன என்னு ம் ராஜபஷே மந்திரிசபை, மந்திரி களத்தில் குதித்தார். தீவிரசிங்களவாத JHU வும் தமிழ்வாத TNA-யும் முஸ்லீம் வாத முஸ்லீம் கட்சிகளும் ஒவ்வொன்றாக களத்தில் ஸ்ரீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்தன.

கட்சியே இல்லாத, சிறிசேனா என்னும் தன் சொந்த கட்சிகாரரால் ராஜபஷே தோற்கடிக்கப்பட்டார். இதுதான் "அட்ரஸ் இல்லாதவரால்" அக்கிரமக்காரர்கள் ஆண்டவன் தண்டிக்கும் யுக்தி!

சரி ஏன் இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு முக்கியமானது?

ஸ்ரீலங்கா கடந்த 10-ஆண்டுகளாக அதிகமாக சீனா பக்கம் சாய்ந்துள்ளது. எம்மன ஹோட்ட துறைமுக திட்டத்தில் சீனா 1117 மிலியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது. கொழும்பு சிட்டி துறைமுக திட்டத்திலும் 1.4 பிலியன் டாலர் முதலீடு செய்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் 3-ல் 1-பகுதியை 99-ஆண்டுகால "லீஸ்" எடுத்துள்ளது. 4.8 பிலியன் டாலருக்கு இலங்கை, விரைவுசாலை, துறைமுகம், ஏர்ப்போர்ட், நீர்பாசனம், குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த ஆர்டர் வாங்கியுள்ளது.

இதனால் இந்தியாவிற்கு என்ன பிரச்சனை என்பது நீங்கள் கேட்பது புரிகிறது?

ஒரு அண்டை நாடு, நம்மோடு நல்லுறவில் இல்லை என்றால் நமக்கு பொருளாதார இழப்பு, பாதுகாப்பு அச்சுறுத்துதல், அதுவே, நம் எதிரிக்கு அடைக்கலம் கொடுத்து அவரது வியாபாரம் மற்றும் ராணுவத்தை அந்நாட்டில் முகாமிடச் செய்தால், நம்நிலை என்னவென்ற் சொல்வது?

அதுதான் இலங்கையில் நடக்கிறது. வெற்றி பெற்ற ஸ்ரீ சேனாவும் அவரை ஆதரித்த ரனில் விக்ரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்கா இருவரும் சீன எதிர்ப்பு, மேற்கு நாடுகள் ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள் இது நமக்கு சாதகமான அம்சம்!

தமிழர்கள் மற்றும் மைனரிட்டி ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றிருப்பதால், ஸ்ரீசேனா தமிழர்களுக்கு "உதவி செய்ய" கடமைபட்டவர்…. செய்வாரா? என்பது போக போகத்தான் தெரியும்!

இந்தியா தனது ராஜேந்திர உறவை சிறப்பாக பயன்படுத்தி வருவது ஸ்ரீலங்கா விஷயத்தில் கண்கூடு… ராஜபஷேவை "மீனவர்களை தூக்கு தண்டனையிலிருந்து" விடுவிக்க செய்தது முதல் செய்தி. ராஜபஷே ஆட்சி மாற்றத்தை தடுக்க "எமர்ஜன்சி" அறிவிக்க முயன்றதை தடுத்து நிறுத்துயது இரண்டாவது செய்தி. ஸ்ரீசேனாவை மோடி வாழ்த்தியது மட்டுமல்ல, இந்தியாவிற்கு வருகை தர அழைப்புவிட்டது மூன்றாவது செய்தி!

கடனில் மூழ்கியுள்ள ஸ்ரீலங்கா பொருளாதாரத்தை மீட்க இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்பது ஸ்ரீசேனாவிற்கு தெரியும். மோடியும் இதை பயன்படுத்தி, பொருளதார உதவிகள் மூலம் உறவு மற்றும் நட்பை வலுப்படுத்துவார்.

இவை செயலாக்கப் பெறும் போது, இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்விலும் முன்னேற்றங்கள் ஏற்படும்.தமிழ் நாட்டில் "தமிழ் வியாபாராம் "செய்துவரும் கட்சிகள் வியாபாராம் மூழ்கி போண்டியாகும் ..

நன்றி ; எஸ்.ஆர். சேகர்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply