பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப் படும் விழாக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பொங்கல், போகி மாக்பிகு, உத்தராயான, மகரசங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு, தமிழ், தெலுங்கு அசாமி, குஜாரத்தி, மற்றும் இந்தியில் பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில்

பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "தமிழக மக்களுக்கு இனியபொங்கல் நல்வாழ்த்துக்கள். கடின உழைப்பை வித்திட்ட விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையும் வளமும்கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், எனது சக நாட்டு மக்களுக்கு நாடுமுழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளுக்கு நான் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் விழாக்கள் மகிழ்ச்சியை தருகின்றன . வேற்றுமையில் ஒற்றுமையாக இந்த நாள் திகழ்கிறது என்றும்
கூறியுள்ளார்

Leave a Reply