வடமாநிலங்களில் இன்று மகரசங்கராந்தி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில், புது டெல்லியில் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவரும் மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொதுவினியோக துறை மந்திரியுமான ராம் விலாஸ் பஸ்வான் வீட்டில் இன்று கொண்டாடப்பட்ட மகரசங்கராந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பஸ்வானின் குடும்பத்தினருக்கு சங்கராந்தி வாழ்த்துதெரிவித்தார்.

இனிப்புதயிரில் அரிசி, அவல்கலந்து தயாரிக்கப்படும் பீகார் மாநில விசேஷ உணவான 'சுடா தஹ்ய் போஜ்' என்னும் உணவை பிரதமர் மோடிக்கு ராம்விலாஸ் பஸ்வான் தனது கைப்பட பரிமாறினார். அதை மோடி விரும்பி, சுவைத்துஉண்டார்.

இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மந்திரிகள், ராம்விலாஸ் பஸ்வானின் துறைசார்ந்த உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply