தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக் கட்டு வீர விளையாட்டு நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்:

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசிடம் அனுமதிபெறுவதில் தமிழக பாஜ தீவிரமாக உள்ளது. டெல்லியில் இருந்து நேற்று புறப்படுவதற்கு முன்பு கூட அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் சந்தித்து ஜல்லிக்கட்டு பிரச்னைபற்றி பேசினேன். இன்று தமிழகத்தில் இருந்துசென்றுள்ள மற்றொரு குழுவினர் அமைச்சரை சந்தித்து பேசுகின்றனர். எனவே, தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக் கட்டு வீர விளையாட்டு நடக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

ஸ்ரீ ரங்கம் இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து எங்களுடைய கூட்டணி கட்சிகளை கலந்து ஆலோசித்த பின்னர் இறுதிமுடிவு எடுக்கப்படும். தமிழக பாஜக தலைமை, கூட்டணி கட்சிகளுடன் பேசிவிட்டு அகில இந்தியதலைமைக்கு அறிக்கை அளிப்பார்கள்.

இதன் பிறகு தலைமை முடிவு எடுக்கும்.இலங்கைபிரச்னை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரதீர்வு காண்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதுசம்பந்தமாக சாகித்ய அகாடமிவிருது பெற்ற எழுத்தாளர் ஜோதி குரூஸ் ஒரு ஆய்வறிக்கையை தயாரித்துள்ளார். அந்த அறிக்கையை வரும் 19ம்தேதி நாங்கள், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் அளிக்க உள்ளோம். இதன்பிறகு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காணப்படும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags:

Leave a Reply