பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்புபடுத்தி அவருக்கு ராஜாங்க ரீதியாக அமெரிக்க அரசு விலக்கு (immunity) அளித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்டவழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற் பதற்காக பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது குஜராத் படுகொலைக்கு காரணமாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள மோடி, வெளிநாட்டின் முக்கியபதவியில் இருப்பவர் என்ற முறையில் அரசு மரியாதையுடன் அமெரிக்காவுக்கு வருவதை எதிர்த்து இங்குள்ள அமெரிக்க நீதிமையத்தை சேர்ந்தவர்கள் நியூயார்க் (தெற்கு) மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ் வழக்கு தொடர்பான விசாரணையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அனலிஸா டோடெஸ், 'ஒருவெளிநாட்டின் உயர்பதவியை வகிப்பவர் என்பதால் ராஜதந்திர அணுகு முறை என்ற விதிவிலக்கின் கீழ் அமெரிக்க அரசின் அரசுமுறை விருந்தினராக வரும்தகுதி மோடிக்கு உண்டு.

மேலும் மனுதாரர் குறிப்பிடும்சம்பவம் இந்த கோர்ட்டின் விசாரணை வரம்புக்குள் வராது என்பதால் இந்தவழக்கை தள்ளுபடி செய்கிறேன்' என்று தீர்ப்பளித்தார்.

Leave a Reply