ஜனவரி மாதம் 15ம் தேதி ஆண்டு தோறும் ராணுவ தினமாக கொண்டாடப் படுகிறது.

இதனை யொட்டி, கொட்டும் மழையிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், ரத்தத்தை உறைய வைக்கும் குளிர்ப் பனியிலும் இன்னுயிரை துச்சமாக மதித்து கடமை யாற்றியும் வரும் இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

'பிறரால் வெல்லமுடியாத நமது வீரர்களின் இணையற்ற வீரத்துக்கும் துணிவுக்கும் ராணுவவீரர்கள் தினமான இன்று நான் தலை வணங்குகிறேன். அவர்களின் உறுதிப்பாடு மற்றும் அர்ப் பணிப்பைக் கண்டு நாங்கள் மிகுந்த பெருமையடைகிறோம்' என ராணுவ வீரர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply