உலகின் நம்பர் ஒன் தலை நகரமாக டெல்லியை நாம் மாற்ற வேண்டியுள்ளது.இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரன்பேடி தெரிவித்துள்ளார்.

அன்னா ஹசா ரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியபங்காற்றி வந்த கிரன்பேடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் டெல்லி பாஜக. தலைவர் ஹர்ஷ் வர்த்தன் ஆகியோர் முன்னிலையில் டெல்லியில் உள்ள பாஜக.வின் தலைமை நிலையத்தில் இன்று பாஜக.வில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில், செய்தியாளர்களிடையே பேசிய கிரன்பேடி, பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பார்த்து, அதனால் ஏற்பட்டஈர்ப்பினால் பாஜக.வில் சேர முடிவுசெய்ததாகவும், வரும் 7ம் தேதி நடைபெறும் டெல்லி சட்ட சபை தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வலிமையான, சிந்தனைதெளிவுடன் கூடிய, நிலையான அரசுதேவை. உலகின் நம்பர் ஒன் தலை நகரமாக டெல்லியை நாம் மாற்ற வேண்டியுள்ளது. எனக்கு எப்படி செயலாற்றுவது என்றும்தெரியும். மற்றவர்களை எப்படி செயலாற்றவைப்பது என்றும் தெரியும் என குறிப்பிட்டார்.

Leave a Reply