ஆம் ஆத்மியில் இருந்து கடந்தாண்டு விலகிய ஷாஜியா இல்மி, நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் ஷாஜியா இல்மி கூறும்போது, "நாட்டின் வளர்ச்சிக் காகவும், டில்லியின் நலனுக்காகவும் பாஜக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்னை மிகவும்ஈர்த்தன. இக்கட்சியில் இருந்தால் மட்டுமே மக்களுக்கு தேவையான நலன் களை முழுமையாக நாட்டுக்கு செய்ய முடியும் என்று தான் எண்ணியதாலும், பிரதமர் மோடியின் செயல் திறன் மீது தனக்கு ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகவும் தான் பா.ஜ.க-வில் இணைந்துள்ளதாக கூறீனார்.

மேலும், தனக்கு பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடனும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாக கூறிய அவர் இப்போது, மோடி சிறப்பாக செயலாற்றுவதாக கடந்த 6 மாதங்களாக தான் உணர்ந்து வந்ததாகவும், தூய்மைஇந்தியா திட்டத்திற்கு மோடி மகாத்மா காந்தியின்பெயரை பயன் படுத்தியது என்னை நெகிழச் செய்ததாகவும் குறிப்பிட்டு பேசினார்.

தனியார் செய்தி தொலைக் காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றிய ஷாஜியா இல்மி, 2011இல் அப்பணியை ராஜினாமா செய்துவிட்டு அன்னா ஹசாரே இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிய ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்து டில்லி சட்ட மன்றத் தேர்தலில் ஆர்.கே. புரம் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் அனில் சர்மாவிடம் தோல்வியடைந்தார். இந்ததொகுதியை கெஜ்ரிவால் தனக்கு ஒதுக்கியது கடும் அதிருப்தியை அவருக்கு ஏற்படுத்தியது.

அண்மையில் பிரதமர் மோடியின் "தூய்மை இந்தியா" திட்டத்தை செயல்படுத்து வதற்காக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஒன்பதுபேரை பா.ஜ.க-வின் தூதுவர்களாக அக்கட்சி நியமித்தது. அதில் ஷாஜியா இல்மியும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply