சென்னையில் நடைபெற்ற ஆடிட்டர் குருமூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோர் நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தனர். திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், நேற்று இரவே அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர். நேற்று நள்ளிரவு சென்னை வந்த அமித்ஷா இன்று மதியம் 1.30 மணியளவில் டில்லி புறப்படுகிறார்.

Leave a Reply