தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக முதல்வர் பதவிவேட்பாளராக, அண்மையில் அக்கட்சியில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிழக்குத் தில்லியில் உள்ள கிருஷ்ணா நகர்தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்தார்.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற கிரண் பேடி, சமூக ஆர்வலராக மக்கள் நலன் சார்ந்த விவகாரங்கள், பெண் உரிமை பிரச்னைகளுக்காக குரல்கொடுத்து வந்தார்.

அண்ணா ஹசாரே தொடங்கிய "ஊழலுக்கு எதிரான இந்தியா' இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
இந்நிலையில், தில்லியில் பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா முன்னிலையில் கிரண் பேடி கடந்த வாரம் பாஜக.,வில் இணைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், "தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் கட்சி மேலிடம் விரும்பினால் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலை எதிர்த்துப் போட்டியிடுவேன்' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்த பாஜக அலுவலகத்துக்கு திங்கள் கிழமை வருமாறு கிரண் பேடி கேட்டுக் கொள்ளப்பட்டார். அப்போது, தில்லி பாஜக முதல்வர் பதவி வேட்பாளராக கிரண் பேடியை அக்கட்சியின் தேர்த குழு பரிந்துரை செய்தது.

Leave a Reply