இலங்கையில் அமைதி, நல்லிணக்க நடவடிக் கைகள், வளர்ச்சியை சிறிசேன தலைமையிலான புதிய அரசு முன்னெடுத்து செல்லும் என்ற நம்பிக்கையுள்ளது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்' என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீராவுடனான சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குபிறகு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா 3 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: உலகம்முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்த தேர்தலை வெற்றி கரமாக முடித்ததற்காக இலங்கை மக்களுக்கு பிரதமர்மோடி வாழ்த்து தெரிவித்தார். இலங்கை அதிபர் சிறி சேனவின் வெற்றி இலங்கையின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுத்து செல்வதோடு, இந்தியாவின் அமைதி மற்றும் முன்னேற்றத் தையும் உறுதிசெய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply