ஜெர்மனியில் வரும் ஏப்ரல்மாதம் நடைபெறவுள்ள ஹன் னோவர் பொருட் காட்சியை இந்தியாவும் சேர்ந்து நடத்துகின்றது. இந்த பொருட் காட்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்கிறார்.

தலை நகர் டெல்லியில் ஜெர்மனி நாட்டு நிதிமந்திரி வோல்பாங் ஸ்குவாபுல்-ஐ சந்தித்துபேசிய பிரதமர் மோடி அவரிடம் தனது ஜெர்மனி பயணத்தை உறுதிப்படுத்தி யுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்தாண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்துப் பேசியதை அவரிடம் நினைவு கூர்ந்த மோடி, விரைவில் அவரை மீண்டும் சந்தித்துப்பேச ஆவலுடன் உள்ளதாக குறிப்பிட்டார்.

Leave a Reply