மன் கி பாத்' ரேடியோ உரையில் பிரதமர் மோடி யுடன் ஒபாமாவும் இணைந்து பேசுகிறார். பிரதமர் நரேந்திரமோடி 'மன் கி பாத்' என்ற பெயரில் கடந்த அக்டோபர் 3–ம் தேதியன்று ரேடியோ வழியாக முதல் முறையாக உரையாடினார். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரேடியோவழியாக நாட்டுமக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த மாதம் அவருடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் உரையாற்றுகிறார். குடியரசு தினவிழா நிகழ்ச்சியை அடுத்து நாட்டுமக்களுக்கு இருவரும் ரேடியோவில் உரையாற்றுகின்றனர்.

இது தொடர்பாக டூவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடி, கூறியிருப்பதாவது:- இந்த மாத 'மன் கி பாத்' எபிசோட் எல்லோருக்கும் ஒருசிறப்பான ஒன்றாக இருக்கும், நமது குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினர் பாரக் ஒபாமாவும் , நானும் இணைந்து எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த 'மன் கி பாத்' சிறப்பு நிகழ்ச்சியில் அதிபர் பாரக் ஒபாமா வுடன் கலந்துகொள்வதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன், இது வரும் ஜனவரி 27ம் தேதி ஒளிபரப்பப்படும். அதிபர் ஒபாமாவுடனான 'மன் கி பாத்' சிறப்புநிகழ்ச்சி உங்களுடைய பங்கேற்பு இல்லாமல் நிறைவடையாது! #AskObamaModi என்ற டேக்கை பயன்படுத்தி உங்களுடைய கேள்விகளை வரும் 25ம் தேதி வரையில் அனுப்புங்கள்.

விவாத நிகழ்ச்சியில் உங்களுடைய கேள்விகளை பதிவுசெய்ய எனதுஅரசு உங்களுக்கு சிறப்பு வாய்ப்பை கொடுத்துள்ளது, உங்களுடைய கேள்விகளை http://mygov.in/signup இணையதளத்திலும் பதிவுசெய்யலாம். இந்த 'மன் கி பாத்' சிறப்பு நிகழ்ச்சி மறக்க முடியாததாக இருக்கும், இந்தியா – அமெரிக்கா இடையே உள்ள சிறப்பான உறவை வெளிப்படுத்தும். என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply