ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் தொடர்பாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தேமுதிக தலைவர் விஜய் காந்தை சந்தித்து பேசியுள்ளார்.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் பாஜக.வும் போட்டியிடுகிறது. வேட்பாளரை இன்னும் தேர்வுசெய்யாத நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவை பெறும்வகையில் பாஜக. நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக. மாநில தலைவர் தமிழிசை செளந்தர ராஜன், மற்றும் அமைப்பு பொதுச் செயலாளர் மோகன்ராஜூலு உள்ளிட்டோர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக. தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் விஜய காந்தை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்திர ராஜன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஸ்ரீ ரங்கத்தில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும், எந்த கட்சியின் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று இரண்டுநாளில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply