உ.பி.,யின் முன்னாள் டி.ஜி.பி. பிரிஜ்லால், பாஜக.,வில் சேர்ந்தார். மாநிலத்தில் சமாஜ்வாதி அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை அவர் விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க.வின் தேசியவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் சேர்ந்துள்ளதாகக் பிரிஜ்லால் கூறியுள்ளார்.

மாநிலத்தில் செயல்பட்டுவந்த மாபியா கும்பல்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை களுக்காக மக்களிடையே பரவலான பாராட்டை பெற்ற இவர், சமீபத்தில் ஓய்வுபெற்றார்.

இவருடன் க்யான் சிங் என்ற மற்றொரு காவல் துறை உயரதிகாரியும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

இது குறித்து மாநிலத்தின் கட்சி விவகார பொறுப்பாளர் ஓம் மதூர் கூறும்போது, "மற்ற கட்சிகளின் கொள்கைகளில் வெறுப்படைந்த பலர் பா.ஜ.க.வில் இணைகிறார்கள்" என்றார்.

Tags:

Leave a Reply