பாஜக.,வின் தில்லி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கிரண்பேடிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஆம் ஆத்மி முக்கியத் தலைவர்களில் ஒருவருமான சாந்திபூஷண் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால், ஆம் ஆத்மியின் மேலிட நிலையில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவராக கருதப்படும் சாந்திபூஷண் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை கூறுகையில், "அண்ணா ஹசாரேயின் சக்தியை உணர்ந்தே அவரது ஆதரவுபெற்ற கிரண் பேடியை கட்சியில்சேர்த்து தில்லி தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது. கேஜரி வாலுக்கு எந்த வகையிலும் சளைத்தவர் அல்ல கிரண்பேடி. இருவரில் யார் முதல்வரானாலும் அண்ணா ஹசாரே மகிழ்ச்சியடைவார். தில்லிக்குத் தான் நன்மை கிடைக்கும். கிரண்பேடிக்கு தெரிவிக்கும் பாராட்டை பாஜக.,வுக்கு வழங்கமாட்டேன்' என்றார்.

Leave a Reply