சிபிஐ கைது நடவடிக்கை தன்னை நோக்கிவரும் என்ற அச்சத்தில் தயாநிதி மாறன் ஊடகங்களிடம் சில தகவல்களை அளித்துள்ளார். சட்டம் அதன் கடமையைச் செய்கிறது. என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிர மணியன் சுவாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் வியாழக் கிழமை கூறியதாவது: "மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக தயா நிதி மாறன் இருந்த போது பி.எஸ்.என்.எல் இணைப் புகளை சட்ட விரோதமாக தனது இல்லத்தில் வைத்திருந்ததாக சி.பி.ஐ தொடர்ந்தவழக்கில் தயா நிதி மாறனின் சகோதரர் கலா நிதி மாறன் நடத்திவரும் தொலைக் காட்சி ஊழியர்கள் சிலரை சிபிஐ கைது செய்துள்ளது. 2007-ல் குரு மூர்த்தி அளித்த புகார் அடிப்படையிலும், நீதி மன்றத்தில் சிபிஐ அளித்த உத்தரவாதம் அடிப்படையிலும் இந்தவழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் தாமதமாகச் சிலர் கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்தவிசாரணை தயாநிதி மாறன் அமைச்சராக இருக்கும்போதே தொடங்கிவிட்டது.

ஆனால், இது ஏதோ மத்தியில் பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்குவந்த பிறகு தான் நடந்தது என்பது போல சகோதரர் நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை கைது செய்ததும் தயாநிதிமாறன் குறை கூறி நாடகமாடுவது இனி எடுபடாது. அவரது குற்றச்சாட்டில் வலுவில்லை.

இந்த விவகாரத்தில் சட்டம் அதன் கடமையை செய்துவருகிறது. அதை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் சிபிஐ கைது நடவடிக்கையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த தயாநிதிமாறன் முயல்கிறார். ஆனால், அவரதுவாதம் சட்டத்துக்கு முன்பும், நீதிமன்றத்திலும் துளியும் எடுபட போவதில்லை.

நீண்டகாலம் இவ்வழக்கு விசாரிக்கப்பட்ட பிறகே சிபிஐ கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. அது தன்னை நோக்கிவரும் என்ற அச்சத்தில் தயாநிதி மாறன் ஊடகங்களிடம் சில தகவல்களை அளித்துள்ளார். சட்டம் அதன் கடமையைச் செய்கிறது. அதை மாறன் எதிர்கொள்ளத்தான் வேண்டும்' என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

Leave a Reply