ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தல்முடிவுகள் வெளியாகி ஒரு மாதமான பிறகும், அரசு அமைப்பதில் அங்கு தொடர்ந்து இழுபறிநிலையே நீடிக்கிறது. இந்நிலையில், காஷ்மீரில் நிலையான அரசு விரைவில் அமையும் என்று பாஜ மாநிலத் தலைவர் ஜூகல் கிஷோர் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

ஜம்முவில் நிருபர்களிடம் ஜூகல் கிஷோர்சர்மா கூறியதாவது: கூட்டணி அரசு அமைப்பதுதொடர்பான பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. விரைவில் மாநிலத்தில் நிலையான அரசு அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம்உள்ளன. எந்தகட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது என்ற தகவலை தற்போது வெளியிடமுடியாது. அரசு அமைவதில் நீடித்துவந்த இழுபறி விரைவில் முடிவுக்குவரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply