பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்தமரியாதை வைத்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்கேப்டன் சவுரவ் கங்குலி, பா.ஜ.,வில் இணைவது குறித்து கருத்துதெரிவிக்க மறுத்துவிட்டார்.

சவுரவ் கங்குலி, பா.ஜ.க,வில் இணையவுள்ளதாக, பிரபல தொழிலதிபர் ஹர்ஷ்கோயங்கா தனது டுவிட்டர் வலை தளத்தில் தெரிவித்திருந்தார். அவர் தனது டுவீட்டில், மேற்குவங்கத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க, முயன்றுவரும் சூழலில், கங்குலியின் வரவு கட்சிக்கு பெரியஊக்கமாக அமையும் . மாநிலத்தில் தற்போது முதல்வராக இருக்கும் திதிக்கும், தாதா என அழைக்கப்படும் கங்குலிக்கும் சரியான போட்டியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சவுரவ் கங்குலி, ஹர்ஷ் கோயங்கா ஏன் இப்படி டுவீட் செய்தார் என தெரியவில்லை. தயவுசெய்து இது குறித்து அவரிடம் கேளுங்கள். எனினும் பிரதமர் நரேந்திரமோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். என்று கங்குலி தெரிவித்தார்.

Leave a Reply