பெண்சிசுவை கருவிலேயே கொல்லும் பாவம், சமூகத்துக்கு செய்யும்துரோகம் என பிரதமர் நரேந்திரமோடி ஆவேசமாக பேசியுள்ளார்.

பெண் குழந்தைகளை காப்பாற்றவும், அவர்களுக்கு அதிகாரம்வழங்கவும், 'மகளை காப்போம்; மகளுக்கு கற்பிப்போம்' என்னும் புதியபிரசார இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இந்த பிரசார இயக்கத்தை ஆண்பெண் விகிதாச் சாரத்தில் மோசமான நிலையில் உள்ள மாநிலங்களில் ஒன்றான அரியானாவில், பானிப்பட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்து ஆவேசமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆண் குழந்தைகளை அனை வரும் விரும்புகிறார்கள். ஆனால் புகுந்த வீட்டின் சொத்து என்ற நம்பிக்கையில் பெண் குழந்தை களை விரும்புவதில்லை. இதனால் நாட்டில் ஆண், பெண் விகிதம் குறைந்து வருகிறது.

குறிப்பாக ஹரியாணாவில் இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஆண்களுக்கு நிகரான பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு பெண் சிசுக்கொலையே முக்கிய காரணமாக உள்ளது. இது ஹரியாணாவில் மட்டும் அல்ல நாடு முழுவதும் இதுபோன்ற மனநிலை பாதிப்பு உள்ளது. இந்த எண்ணம், மனநிலையை ஒழிக்கவேண்டும்.

அதுவும் மருத்துவர்களே பெண் சிசுக்கருவை கலைப்பது கண்டிக்கத் தக்கது. அது சமூகத்துக்கு எதிரான துரோகம் ஆகும். இந்த குற் றத்தை செய்து கொண்டு 21-ம் நூற்றாண்டின் குடிமக்கள் என்று கூறிக்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது.

18-ம் நூற்றாண்டில் பெண் குழந்தைகளை பிறக்கவிட்டு சிறிது காலம் வாழவாவது விட்டார்கள். இப்போது தாயின் கருப்பையில் வளரும்போதே பெண் சிசுவை அழிக்கிறோம். இது 18-ம் நூற்றாண் டின் மனநிலையைவிட மோசமா னது. பெண் சிசுக்கருவை அழிக்கக் கூடாது என்று நாம் சபதம் ஏற்க வேண்டும்.

முதல் விண்வெளி வீராங்கனை யான கல்பனா சாவ்லாவை உருவாக் கிய ஹரியாணாவில் பெண் சிசுக் கொலை அதிக அளவில் நடை பெறுவது வேதனையாக உள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

Tags:

Leave a Reply