ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், கட்சியின் மாநில துணைத் தலைவர் மு. சுப்ரமணியம் போட்டியிடுவார் என அறிவித்தார். ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுப்ரமணியத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரி வேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் ஆகியோர் ஆதரவளித்துள்ளதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்ரீரங்கத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றிபெறுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply