மலையாளப்பட உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் சுரேஷ் கோபி. சமீப காலமாக சுரேஷ் கோபி பாரதீய ஜனதாவில் சேரப்போவதாக கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் சுரேஷ் கோபி பாரதீய ஜனதாவில் இணைய உள்ளதை கேரளமாநில பாரதீய ஜனதா தலைவர் முரளிதரன் உறுதிபடுத்தியுள்ளார்.

இது குறித்து கோட்டையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கேரள பா.ஜ.க. மாநில தலைவர் முரளிதரன் கூறியதாவது:–

பாரதீய ஜனதாவைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவர் சுரேஷ் கோபியை பா. ஜனதாவில் இணைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

சரியான நேரத்தில் தனதுமுடிவை தெரிவிப்பதாக அவரிடம் சுரேஷ்கோபி உறுதி அளித்துள்ளார். பாரதீய ஜனதாவில் இணையுமாறு சுரேஷ் கோபிக்கு அதிகார பூர்வமாக அழைப்பு விடுக்க பட்டுள்ளது. இது குறித்து அவர் விரைவில் பதிலளிப்பார் என்று அவர் கூறி னார்.

Leave a Reply