உத்தரகாண்டில் உள்ள ஹரித் வாரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் உள்ள எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான புதிய ஆட்சியில் கடந்த 6 மாத காலமாக பாகிஸ்தானுக்கு தகுந்தபதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், பாகிஸ்தானில் உள்ள எல்லோருமே தீவிரவாதிகள் அல்ல. அங்குள்ள மக்களும் ஆண்டாண்டு காலமாக தீவிரவாதத்துக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், மாறி மாறி ஆட்சியில் அமரும் அரசுகளின் தீவிரவாதத்துக்கு எதிரான குரல்மட்டும் எப்போதுமே தெளிவாக இருந்தது இல்லை என தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் சிறந்த ராஜதந்திர அணுகு முறையால் அமெரிக்க அதிபர் ஒபாமா வெட்டு ஒன்னு -துண்டு இரண்டு என்னும் விதமாக தீவிரவாதிகள் விவகாரத்தில் பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply