இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி கட்டித்தழுவி வரவேற்றார்.

இந்தியாவின் 66 வது குடியரசு தினவிழா நாளை நாடெங்கும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் அரசு சார்பில்நடக்கும் விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய கொடியை ஏற்றிவைப்பார். இதைத்தொடர்ந்து கண்கவர் அணி வகுப்பு நடைபெறும்.

இந்திய குடியரசுதின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டை சேர்ந்த தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது மரபாக உள்ளது.

அந்தவகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அழைக்கப்பட்டுள்ளார். இந்திய குடியரசு தினவிழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அழைக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று இந்தியாவந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை பிரதமர் நரேந்திரமோடி நேரில் சென்று வரவேற்றார்.

அப்போது அவரை கட்டித்தழுவி மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதையடுத்து ஒபாமாவும் அவரது மனைவியும் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட பிரத்யேக வாகனமான பீஸ்ட் காரில் மவுரியா ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

Leave a Reply