அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நட்புறவில் புதிய அத்தி யாயம் தொடங்குகிறது, 'ஜெய் ஹிந்த்' என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் இந்தியக் குடியரசு தினவிழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மேலும் அமெரிக்க அதிபருக்கு சிறப்புமரியாதை அளிக்க ஜனாதிபதி மாளிகை காத்திருந்த வேளையில், அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், "குடியரசு தின விழாவை கொண்டா அதிபர் ஒபாமா மீண்டும் இந்தியாவருகையில் மிகவும் பெருமை கொண்டுள்ளார் மற்றும் அமெரிக்க இந்திய நட்புறவில் புதியஅத்தியாயம் தொடங்குகிறது. ஜெய் ஹிந்த்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இந்தியாவந்துள்ள, அமெரிக்க தேசியபாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைசு டுவிட்டரில் ஜெய்ஹிந்த் என்று கூறியுள்ளார். இந்தியாவில் அதிபர் ஒபாமாவுடன் குடியரசு தினவிழாவை கொண்டாடுவதில் மிகவும் வியப்பாக உள்ளது – ஜெய் ஹிந்த் என்று அவர் டூவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply