இந்திய அணு உலைகளுக்கு எரிபொருள்வழங்க அமெரிக்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் டெல்லியில் ஒபாமா – மோடி இருவரும் கையெழுத்திட்டனர்.

குடியரசுதின விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. தனிவிமானம் மூலம் டெல்லி வந்திறங்கிய ஒபாமாவை, விமான நிலையத்திற்கு நேரில்சென்று வரவேற்றார் மோடி. பின்னர், குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற ஒபாமாவுக்கு, அதிகாரப் பூர்வமான அரசு மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலிசெலுத்தினார் ஒபாமா. பின்னர், இரு நாட்டு அமைச்சர்களுடன் பிரதமர் மோடியும், ஒபாமாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இந்திய அணு உலைகளுக்கு எரி பொருள் வழங்க அமெரிக்கா சம்மதம்தெரிவித்தது. அதற்கான ஒப்பந்தத்தில் ஒபாமா மற்றும் மோடி கையெழுத் திட்டனர். மேலும் எரிபொருள் பயன்பாடு குறித்து விளக்கம் கேட்கப்பட மாட்டாது என அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

Leave a Reply