ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்துள்ளார். ஹைதராபாத் ஹவுஸ் சென்ற ஒபாமாவுக்கு மோடி மதிய விருந்து அளித்தார். விருந்தின் போது அவர்கள் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஹைதராபாத் ஹவுஸ் பூங்காவில் இருவரும் சிறிதுநேரம் நடந்து கொண்டே பேசினர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்புபந்தலில் இருவரும் அமர்ந்தனர். அப்போது மோடி ஒபாமாவுக்கு டீ ஊற்றி கொடுத்தார். சிறு வயதில் டீ கடையில் வேலை செய்தவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply