பாரதரத்னா பெற்ற தலைவர் – மறைந்த மஹாமானா மதன் மோகன் மாளவியா. மாஹாமானா என்றால் 'சிறந்த இதயம் படைத்த மனிதர்' என்று பொருள். 1861-ல் பிறந்து இந்த்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சுதேசி இயக்க வீரராக வாழ்ந்த மாளவியா, நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலேயே 1946-ல் மறைந்துவிட்டார்.

இவர்தான் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் (BHU) என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த கல்வி நிறுவனத்தை வாரணாசியில் நிறுவியவர். BHU ஆசியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம் என்பதுடன் உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களுள் ஒன்று, சுமார் 12,000 மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனம். 1919 லிருந்து 1938 வரை இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த மாளவியா கல்வித்துறைக்கும் இந்துமத சீர்திருத்தத்திற்கும் இணையற்ற தொண்டு செய்தவர். 1909, 1913, 1919, 1932 என்று நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர். 1934-ல் காங்கிரசை விட்டு விலகிய இவர், இந்து மகாசபாவின் ஸ்தாபகர்களில் ஒருவர்.

இந்தியாவில் இன்று என்.சி.சி. என்றழைக்கப்படும் ஸ்கெளட்டிங்கை முதன் முதலில் பள்ளிகளில் அறிமுகம் செய்து தேசிய உணர்ச்சியை ஊட்டியவர் மஹாமானா. தி லீடர், இந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கிலப் பத்திகையின் நிறுவனர் – தலைவராக இருந்ததுடன் இந்துஸ்தான் டைம்ஷின் இந்திப் பதிப்பை 1936-ல் கொணர்ந்தவர். பல்வேறு கட்டங்களில் இன்னும் பல பத்திரிக்கைகள் நடத்தியவர். இந்த ஆண்டு பாரத ரத்னா விருது பெற்ற ஐவரும் மத்திய பிரதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும் வாஜ்பாயைப் போலவே உத்தரப்பிரதேசத்திலும் வாழ்க்கை நடத்தியவர்.

மாளவியாவின் தந்தை சமஸ்கிருத மொழிப் புலவர் – பகவத் கீதையை கிராமம் கிராமமாகச் சென்று பரப்பி அதில் வரும் சிறு வருவாயில் குடும்பத்தைக் காப்பாற்றியவர். வாஜ்பாயைப் போலவே ஐவரும் கவிஞர். சட்டம் பயின்றவர். 1911லேயே வழக்கறிஞராகத் தொழில் செய்வதை தேசப்பணிக்காக விட்டுவிட்டவர். ஆனாலும் சுதந்திரப் போராட்டத்தில் சௌரி – சௌரா வழக்கில் 177 சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பிரிட்டிஷ் அரசு தூக்கு தண்டனை விதித்தபோது, மறுபடியும் கோட்டை மாட்டிக்கொண்டு வாதாடி 156 பேரை விடுவித்தார்.

காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கென்று தனி தேர்தல் தொகுதிகள் கொண்டு வந்தபோது, அது இந்தியர்களை மனதளவில் பிரித்துவிடும் என்று சொல்லித் தீவிரமாக எதிர்த்ததுடன் இதனால் காங்கிரசிலிருந்து விலகி மாதவ் ஸ்ரீஹரி அனே என்பவருடன் சேர்ந்து காங்கிரஸ் தேசிய கட்சி என்ற புதிய கட்சி தொடங்கி 1934 சட்டமன்ற தேர்தலில் 12 இடங்கள் வென்றார்.

தீண்டாமையை எதிர்த்ததுடன் ஹரிஜன் சேவா சங்கம் என்ற இயக்%

Comments are closed.