நாடு முழுவதும் இன்று 66- வது குடியரசு தினவிழா கோலகலகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்புவிருந்தினராக இந்தியா வந்துள்ளார். டெல்லி அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திரமோடி அஞ்சலி செலுத்தினார். போர் நினைவுச் சினனத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். .

டெல்லி ராஜ் பாத் சாலையில் குடியரசு தின விழா இன்று காலை தொடங்கியது. விழாவில் கலந்துகொள்ள வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி வரவேற்றார். விழா நடக்கும் இடத்திற்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அழைத்து செல்லப்பட்டார். விழாநடக்கும் இடத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்தார். அவரை துணை ஜனாதிபதி அன்சாரி, பிரதமர் மோடி, மேலும் மந்திரிகள் வரவேற்றனர்.பின்னர் தேசியகொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் ஒலிக்கப்ட்டது. பின்னர் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரணாப் உள்ளிட்டோர் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply