காஷ்மீரில் தீவிர வாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர்நீத்த சென்னை ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு 'அசோக சக்ரா' விருது வழங்கப்பட்டது.

ராணுவத்தில் சிறந்தசேவை புரிபவர்களுக்கு குடியரசு தினவிழாவையொட்டி மிக உயர்ந்த விருதான 'அசோக சக்ரா' விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு அசோக சக்ரா விருது, காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர்த் தியாகம்செய்த சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ராணுவமேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் நாயக் நீரஜ் குமார் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது . இந்நிலையில் டெல்லியில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல்மாதம் 25–ந்தேதி காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் புகுந்த 2 தீவிரவாதிகளை படுகாயம்அடைந்த நிலையிலும் தனது உயிரை பொருட்படுத்தாது, முகுந்த் வரதராஜன் சுட்டுக்கொன்று சாகசம் நிகழ்த்தினார்.

இதே போன்று நாயக் நீரஜ் குமார், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 24–ந் தேதி காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளை தேடும்வேட்டையில் ஈடுபட்டு இருந்தபோது சக வீரரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன், துணிச்சலுடன் ஒரு தீவிரவாதியை சுட்டுக்கொன்றார்.

இவர்களின் மெய் சிலிர்க்க வைக்கும் துணிச்சல் மற்றும் உயிர் தியாகத்துக்காக அசோகசக்ரா விருது வழங்கப்பட்டது

Leave a Reply