பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இணைந்து இன்று 27-ம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு 8 மணிக்கு மனதின் குரல் என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் 4-வது முறையாக உரையாற்ற உள்ளனர்.

காரைக்கால் வானொலி நிலைய உதவி இயக்குனர் (நிகழ்ச்சிகள்) கே.சித்ர லேகா சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது குறித்து கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி இன்று 27-ம் தேதி செவ்வாய் கிழமை இரவு 8 மணிக்கு மனதின் குரல் என்ற தலைப்பில் நாட்டுமக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் 4-வது முறையாக உரையாற்ற உள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா இணைந்து உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சி நாடெங்கும் உள்ள அகில இந்திய வானொலியின் அனைத்து அலை வரிசைகளிலும் ஒலிபரப்பாகும்.

பாரத பிரதமர், அமெரிக்க அதிபர் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியின் தமிழாக்கத்தை 28ம் தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பும். இந்த இரு நிகழ்ச்சி களையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல்செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply