இந்தியாவில் தொழில் தொடங்க தடையாக உள்ள நடைமுறைகளை இந்திய அரசு நீக்கும் என்று இந்திய-அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

டெல்லியில் இந்திய-அமெரிக்க தொழில் அதிபர்களை பிரதமர் நரேந்திரமோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆகியோர் சந்தித்து பேசினர்.

அந்த கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது:-

இந்தியாவில் வணிகம்செய்ய சிறந்த சூழலை ஏற்படுத்தித்தர அரசு விரும்புகிறது. இந்தியாவில் தொழில்தொடங்க தடையாக உள்ள நடைமுறைகளை அரசு நீக்கும். ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமை யானதாக உள்ளது. நாட்டின் பண வீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒருசதவிகிதம் அதிகரித்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற 6 மாதத்தில் இந்தியாவில் அமெரிக்க முதலீடு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. தூய்மையான எரிசக்தியை பெற உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.

இந்திய வேளாண்துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். திறமை, நோக்கம் மற்றும் வேகத்தில் கவனம்செலுத்த நான் விரும்புகிறேன். மிகப் பெரிய திட்டங்கள் பிரதம அலுவலகத்தால் கண்காணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு. இந்தியா முழுசாத்திய கூறுகளையும் கொண்டுள்ளது.

கடந்த 8 மாதங்களாக நான் மக்களின் தீர்ப்பை நிறைவு செய்ய, அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முழுவதுமாக பணியாற்றினேன். நமதுபணி மிகவும் பெரியது. இது ஒரே இரவில் நடக்காது. நாம் நமது சவால்களை அறிந்துள்ளோம். ஆனால் நாம் நமது அதிகவெற்றிகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளோம்.

நீங்கள் ஒரு திறந்தசூழலை தேடினால், நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுவோம் மற்றும் உங்களுடைய திட்டத்தில் உங்களுடன் பயணிப்போம். நம்மிடம் இளைஞர் சக்தி உள்ளது. பசுமை புரட்சி இலக்கை எட்ட இந்தியர்களாகிய நாம் கடுமையாக உழைத்துள்ளோம்.

கடந்த 4 மாதங்களில் மட்டும் 110 மில்லியன் புதியவங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உலக பொருளாதாரத்தை ஸ்திரமாக்குவதில் முக்கிய நங்கூரமாக இந்தியா இருக்கும். இந்தியா-அமெரிக்க ஒன்றாக இணைந்து இந்த உலகை அனை வருக்கும் நல்லதாக உருவாக்கும் என்று கூறினார்.

Leave a Reply