ஒபாமா டெல்லி வந்தவுடன், பிரதமர் நரேந்திர மோதி அவரை வரவேற்றார். வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது, விமான நிலையத்துக்கு பிரதமரோ அல்லது குடியரசுதலைவரோ சென்று வரவேற்பது மரபு இல்லை. மத்திய அமைச்சர்கள்தான் வரவேற்பது வழக்கம்.

இதையொட்டி ஒபாமாவை வரவேற்கும் வரவேற்புகுழு தலைவராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் திடீரென பிரதமர் நரேந்திரமோடி பாலம் விமான நிலையத்துக்கு வந்தார். ஒபாமாவின் விமானம் தரை யிறங்கியதும், விமானத்தின் அருகில்சென்று ஒபாமாவை கட்டித்தழுவி வரவேற்றார்.

Leave a Reply