அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக கடந்த 25ந் தேதி இந்தியாவந்தார். குடியரசு தின அணிவகுப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

3-வது நாளான நேற்று இறுதி நிகழ்ச்சியாக, டெல்லி சிறிபோர்ட் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்தநிகழ்ச்சி முடிவடைந்தவுடன், சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக, அங்கிருந்து நேரடியாக டெல்லி பாலம் விமானப்படை தளத்துக்கு சென்றார்.

அங்கு தயாராக இருந்த தனது ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில், தன் மனைவி மிச்செலியுடன் ஏறினார். அவர்களை மத்திய மந்திரி பியுஷ்கோயல் மற்றும் உயர் அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்

Leave a Reply