ஒபாமா வருகை, இந்தியா – அமெரிக்கா நட்புறவில் புதியசகாப்தத்தை ஏற்படுத்தி யுள்ளதாக என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக இந்தியாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா தனது பயணத்தை முடித்துக் கொண்டு இன்று பிற்பகல் தனது மனைவி மிஷெலுடன் சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.

இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டரில், "Farewell @WhiteHouse! உங்கள் வருகை இந்தியா – அமெரிக்கா நட்புறவை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் சென்றுள்ளது. புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது. தங்கள் பயணம் பாதுகாப்பானதாக அமைய வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெள்ளைமாளிகை ட்விட்டர் கணக்கில், "@NarendraModi நினைவில் நீங்காத ஒரு பயணத்தை உருவாக்கித் தந்ததற்கு நன்றி. இந்தியமக்களின் கனிவான வரவேற்பை மறக்கமுடியாது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

Leave a Reply