ஸ்ரீலங்கா என்றழைக்கப்படும் இலங்கையில் 'கண்டி' எனும் நகரில் திருவாளர் மருதூர் கோபாலன், சத்தியபாமா தம்பதியர்க்கு இரண்டாம் புதல்வனாக 1917-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 17-ம் நாளன்று இவர் பிறந்தார்.

இவர் பிறப்பதற்கு முன்பு இவரது குடும்பம் கண்டியில் செல்வச் செழிப்புடனே வாழ்ந்தது. இவரது தந்தையான கோபால மேனன் மாஜிஷ்ட்ரேட்டாகவும், பின்னர் பேராசிரியராகவும் பணியாற்றினார். விதியானது, இவர்கள் குடும்பத்தை வறுமையில் இட்டுச் சென்றது. இவரது தந்தை கோபாமேனன் கல்லூரி ஒன்றில் ஆசிரியராய் பணிபுரிந்த போதுதான் திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் பிறந்தார்.

எம்.ஜி.ஆர். அவர்கள் 30 மாத குழந்தையாக இருந்தபோது இவரது தந்தை இயற்கை எய்தினார். குடும்ப பாரம் தாய் சத்யபாமாவின் தலைமேல் சுமத்தப்பட்டது. அவரது தாய் இரண்டு ஆண் குழந்தைகளையும் பராமரிக்க படாதபாடுபட்டார். இத்தருணத்தில் தாய் பிழைப்பிற்காக இரு குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் குடியேறினார். அப்போது இக்குடும்பத்தாரின் வறுமை நிலை கண்டு மனமிரங்கிய நாராயணன் நாயர் என்பவரும் வேலு நாயரும் அக்குடும்பத்திற்கு உதவிக்காரம் நீட்டி அக்குடும்பத்தில் நிலவிய வறுமை நிலையை போக்கினார்.

இவர்களுள் நாராயணன் நாயர் என்பவர் நாடகக் கம்பெனியில் பின்னணி குரல் கொடுத்து வந்தார். கும்பகோணத்தில், நாராயண நாயரின் உதவியுடன் சிறுவன் எம்.ஜி.ஆரை ஆனையடிப் பள்ளியில் சேர்த்தார். குடும்பத்தை வறுமை வாட்டியெடுத்தது. என்னதான் உறவினர் உதவி புரிந்தாலும், அவர்கள் கையை எதிர்பார்த்து வாழ விரும்பாத அத்தாய் படிக்க வேண்டிய அப்பிஞ்சு உள்ளங்களை நாடக கம்பெனியொன்றில் சேர்த்து விட்டார். இதற்கு நாராயணன் நாயரும் உதவி புரிந்தார்.

அந்நாடகக் கம்பெனியில் இருவருக்கும் சம்பளமாக மூன்று வேளை சாப்பாடு மட்டுமே கொடுக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அவர்கள் நாடகத் துறையில் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கினார். அதற்கு அவரது கலையார்வமும், அவரது கட்டழகும், பொன்னிறமும் தக்க துணை பூந்தது. எம்.ஜி.ஆரைத் தேடி நாடக வாய்ப்புகள் பல குவிந்தது. இவர் முதன்முதலாக நடித்த லவகுசா எனும் நாடகத்திற்காக முதன்முதலாக பெற்ற ஊதியம் வெறும் 25 பைசாதான். நாடகத் துறையில் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட அனுபவம் அவருக்கு பல வாய்ப்புகள் தேடிவர தொடங்கிற்று. இதனால் அவரது குடும்ப வறுமை சற்றே விலகத் தொடங்கிற்று.

இவர் நாடகத்தில் பல வேடங்களை ஏற்று நடித்தமையால் இவரது நடிப்பில் உள்ள தத்ரூபத்தை உணர்ந்த தாய்குலங்கள் தங்கள் ஏகோபித்த ஆதரவை எம்.ஜி.ஆருக்கு வாரி வழங்கினர். இவரது நடிப்புத் திறன் கண்ட அன்றைய முன்னணி கலைஞர்களான பி.யூ. சின்னப்பா, எஸ்.ஜி.கிட்டப்பா போன்றோர்களெல்லாம் எம்.ஜி.ஆரை பாராட்டியதுடன் இவரது நடிப்புத் திறன் மென்மேலும் மேலோங்கி வளர ஆக்கமும், ஊக்கமும் அளித்தனர். ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரின் நாடகப் புகழ் ரங்கூன், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலெல்லாம் பரவவே அதன் நிமித்தம் எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியும் சிறு வயதிலேயே கப்பல் பயணமாக அந்நாடுகளுக்கேல்லாம் சென்று வந்தனர்.

எம்.ஜி.ஆர். நடித்த நாடகத்தின் மூலம் அன்றைய காலத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக பல காட்சிகள் மக்கள் மனத்தைக் கிளர்ந்தெழச் செய்துள்ளது. சுதந்திரப் போராட்ட காட்சிகளில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்து வந்ததால் மகாத்மா காந்தியின் மீதும், இந்நாட்டின் மீதும் அளவற்ற பற்று வைக்கலானார்.

இதன் காரணமாக எம்.ஜி.ஆர். தன்னை காங்கிரஸ் இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் மீது அளவற்ற பற்று கொண்டவராவார்.
இதனிடையே வெள்ளித் திரையில் மாபெரும் சக்தியானது கால் பரப்பியது. இதனால் நாடகத் துறை கலைஞர்கள் திரை உலகை நோக்கி படையெடுத்தனர். எம்.ஜி.ஆரும் அவரது சகோதரர் சக்ரபாணியும் சினிமாக் கம்பெனிகளின் வாயிற்படிதொரும் வாய்ப்புக்காக ஏறி இறங்கினர். ஆனால் சினிமாப் பட வாய்ப்பென்பது எட்டாக்கனியாகவே இருந்தது.

கதர் ஜிப்பாவும், கதர் வேட்டியும், சுருள் முடியும் கொண்ட எம்.ஜி.ஆர். சினிமாப் பட கம்பெனிகள் தோறும் ஏறி இறங்கினார். பனித்திரை நீங்கி பகலவன் தன் பொன்னொளி கதிர் வீசுவதுபோல, எம்.ஜி.ஆரின் வாழ்விலும் வறுமை நீங்கி வளம் பெருகத் தொடங்கியது. எஸ்.எஸ். வாசன் எழுதிய வேல் பிக்சர்ஸ் திரைப்படக் கம்பெனியார் 1935-ம் ஆண்டில் தயாரித்த "சதிலீலாவதி" என்னும் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இப்படத்தில் எம்.ஜி.ஆர். நடித்ததற்காக நூறு ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதனையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின் 'இரு சகோதரர்கள்', 'மாயாமச்சீந்திரா' போன்ற படவாய்ப்புகள் வந்து சேர்ந்தன. வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் சறுக்கல்கள் தொடர்ந்தாலும் தனது இலட்சியத்தையும் கொள்கை உறுதியையும் மட்டும் எம்.ஜி.ஆர். கைவிடவில்லை.

கொள்கை வீரன் எம்.ஜி.ஆரை பட வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கியது. சகோதரர்கள் இருவருமே நடிப்புத்துறையில் பெரிதும் ஆர்வங்காட்ட தொடங்கியதால் குடும்ப வறுமையும் விலகத் தொடங்கியது.

இந்நிலையில் கலைஞர் மு.கருணாநிதி கதை வசனம் எழுதிய 'மருதநாட்டு இளவரசி'யில் எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்தார். இதில் அவரது ஆற்றல்கள் அத்தனையும் வெளிப்படுத்தி நடித்தார். எம்.ஜி.ஆரின் திரைவாழ்வு ஒளிவீசத் தொடங்கியது. எம்.ஜி.ஆரின் கனவுகள் எல்லாம் நனவாகும் படியாக காலம் கனிந்தது.

எம்.ஜி.ஆரின் இளமைக் காலங்கள் வறுமை நிறைந்ததாகவே காணப்பட்டாலும், நற்பண்புகளுக்கும், தயாள சிந்தனைக்கும் பஞ்சமே ஏற்பட்டதில்லை எனலாம்.

திரை உலகமென்பது எப்பொழுதும் ஒரேமாதிரியான நிலையான வசதியையும் வாய்ப்பையும் கொடுத்துவிடாது. அப்படிப்பட்ட திரை உலகம் எம்.ஜி.ஆரையும் ஏமாற்றியது. அப்போது இரண்டாம் உலக யுத்தத்தால் பல இடங்களில் பல பாதிப்புகள் ஏற்பட்டது. அதன் பாதிப்பு திரை உலகையும் விட்டுவைக்கவில்லை. அப்போது அவர் இராணுவத்தில் சேர்ந்துவிடலாமா என யோசித்தார்.

அதற்குரிய ஏற்பாடுகளை இவர் செய்யத் தொடங்குகையில் 'சாயா' என்ற படத்தில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வாய்ப்பளித்தது. ஆகையால் எம்.ஜி.ஆர். அவர்கள் ராணுவத்தில் சேரும் முயற்சியை கைவிட்டார். இந்நிலையில் எம்.ஜி.ஆரின் துணைவியார் தங்கமணி மாரடைப்பால் காலமானார். மனைவியின் பிரிவு எம்.ஜி.ஆரை பெரிதும் பாதித்தது.

எனவே எம்.ஜி.ஆருக்கு அவரது தாயார் 'சதானந்தவதி' என்ற பெண்ணை மனம் முடித்து வைத்தார் அவ்வம்மையாரும் இயற்கையான மரணமெய்தினார். இந்நிலையில் 'மருதநாட்டு இளவரசி' எனும் திரைப்படத்தில் நடித்த வி.என். ஜானகியுடன் காதல் மலரவே இருவரும் இல்லற வாழ்வை இனிதே நடத்தினர்.

இப்படத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் கலைத்திறன் முழுவதையும் வெளிப்படுத்தியதால் இவரது புகழ் தமிழகத்தில் உள்ள பட்டிதொட்டிகளிலெல்லாம் பரவத் தொடங்கிற்று. இதனைத் தொடர்ந்து வெற்றிகள் பல எம்.ஜி.ஆரை தேடி வந்தன. படங்கள் பல குவிந்தாலும், பணம் பல குவிந்தாலும், எம்.ஜி.ஆரிடம் இயல்பாகவே அமைந்துவிட்ட நற்குணங்கள் எதுவுமே எம்.ஜி.ஆரை விட்டு சற்றும் குறையவில்லை.

1959க்குப் பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள் கலைத்துரையுடன் சமூகப் பணிகளிலும் தன் நாட்டத்தை செலுத்தத் தொடங்கினார். அதற்கு அடிப்படையாக அவர் நடித்து வெளியான படங்களின் வெற்றியும் மக்கள் அவர் மீது வைத்துள்ள அபரிமிதமான அன்புமே முக்கிய காரணமாயிருந்தது எனலாம். எம்.ஜி.ஆரின் செல்வாக்கும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருந்தது.

1967-ல் எம்.ஜி.ஆர். திரைப்படத்துறையிலும், அரசியலிலும் புகழின் உச்சியில் இருந்தார். எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களில் முன்னணித் தலைவராக விளங்கினார். அக்கட்சியின் தலைவரான அறிஞர் அண்ணா அவர்களும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட அன்பு வைத்திருந்தார். அது மட்டுமன்றி அவர் பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா போன்ற தலைவர்களிடத்தில் பற்றுதலும், நெருங்கிய தொடர்பும் வைத்திருந்தார்.

1967-ல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது நடிகர் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். குண்டடிபட்ட எம்.ஜி.ஆர். அவர்களின் படத்தை சுவரொட்டியில் அச்சிட்டு தி.மு.க. கட்சியினர் வாக்கு சேகரித்தனர். எம்.ஜி.ஆர். அவர்கள் பரங்கிமலை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இத்தேர்தலில் எம்.ஜி.ஆர். அமோக வெற்றி பெற்றதுடன் திமு.க.வும் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும் வெற்றிப் பாதையில் விரைந்து முன்னேறிக் கொண்டிருந்தது. அவருக்கு பட்டங்களும், பாராட்டுகளும் குவிந்த வண்ணமிருந்தன. எம்.ஜி.ஆர். திரும்பிய திசையெல்லாம் வெற்றியின் தேவதை புன்னகைத்தாள்.

இந்நிலையில் தான் அரசியலில் திடீர் புயல் ஒன்று வீசத் தொடங்கியது. அதற்கு அச்சாரமாய் அன்றைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களே காரணமானார். அவரைச் சுற்றியிருந்த சில சுயநலக்காரர்களும், அவரது செயலுக்கு தூபமிட்டனர். அப்போது இவர் நடித்து வெளியான உலகம் சுற்றும் வாலிபன் எனும் படம் வெளிவராமல் தடுத்து நிறுத்த சதித் திட்டங்கள் பல தீட்டினர்.

1973-ல் மே மாதம் 31ம் தேதியன்று இப்படம் வெளியானபோது ரசிகர்கள் இப்படத்திற்கு அமோக ஆதரவளித்து இப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கினார்கள். எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றங்கள் எம்.ஜி.ஆர். இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு முடிக்கும் நிலையிலிருந்தார்கள்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். சார்ந்திருந்த இயக்கத்தலைவரும் தமிழக முதல்வருமான அறிஞர் அண்ணா அவர்கள் 1969ம்ஆண்டு பிப்வரி மாதம் 3ம் தேதியன்று இன்னுயிர் நீத்தார். தலைவனை இழந்த தி.மு.க. மாலுமி இல்லாத கப்பல்போல் தடுமாறத் தொடங்கியது. அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்தது. நாவலர் நெடுஞ்செழியனுக்கும், கலைஞர் மு. கருணாநிதிக்கும் இடையே போட்டி நிலவிய நிலையில் எம்.ஜி.ஆர். அவர்கள் மு.கருணாநிதியே முதல்வராவதற்கு பேருதவி புரிந்தார். இதன் மூலம் கட்சி உடையாமல் பாதுகாக்க எம்.ஜி.ஆர். அவர்கள் பேருதவி புரிந்தார். அப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் அக்கட்சியின் பொருளாளராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

தலைவனை இழந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் 1971ல் பொதுத் தேர்தல் ஒன்றை சந்திக்க நேர்ந்தது. அத்தர்தலின் போது எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகமெங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டார். அத்தேர்தலில் தி.மு.க. 184 இடங்களில் வெற்றிபெற்றது. எம்.ஜி.ஆர். அவர்கள் பரங்கிமலை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தி.மு.க. கருணாநிதியின் தலைமையில் ஆட்சியமைத்தது. திருக்கழுக்குன்றத்தில் நடந்த தி.மு.க. மாநாட்டின்போது கட்சியின் பொருளாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்கள் மாநாட்டு கணக்குகளை ஒப்படைக்க வேண்டுமென்றும், ஊழலற்ற அரசு நடத்தும்படி மாநாட்டில் முழங்கினார். இதனால் கோபமுற்ற திரு.மு.கருணாநிதி, எம்.ஜி.ஆரை அக்கட்சியிலிருந்து சஸ்பென்ட் செய்வதற்கான உத்தரவை வெளியிட்டார். திரு.மு.கருணாநிதியின் சஸ்பென்ட் செய்தி அறிந்த பல முன்னணி தலைவர்கள் பலர் கண்டனக் குரல்களை எழுப்பினர். ஆனால் இதற்கெல்லாம் எம்.ஜி.ஆர். அவர்கள் வாய்மூடி மௌனியாகவே இருந்தார். இந்நிலையில் 1972-ல் நடத்த வேண்டிய தேர்தலை 1971-லேயே நடத்த வேண்டியதாயிற்று.

இத்தேர்தலிலும் எம்.ஜி.ஆரின் சலியாதா உழைப்பினால் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது. 1972ஆம் ஆண்டு மதுரை மாநாட்டில் உரையாற்றிய எம்.ஜி.ஆர். கழக அரசை கலைக்கும் மத்திய அரசின் எண்ணத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். நாளுக்கு நாள் கருணாநிதி எம்.ஜி.ஆர். இடையேயான மோதல் வலுத்தது. இதன் காரணமாக திரு.கருணாநிதி அவர்கள் எம்.ஜி.ஆரை சாதாரண அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் பொருளாளர் படிவியிலிருந்தும் நீக்கப்பட்டதாக அறிவித்தார்.

ஆனால் அதுபற்றி எல்லாம் சற்றும் கவலைப்படாத எம்.ஜி.ஆர். வழக்கம் போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். ஆனால் கருணாநிதியின் நீக்கல் நடவடிக்கையானது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் கருணாநிதிக்கு எதிரா நடவைக்கையானது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மக்கள் கருணாநிதிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தி.மு.க. பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டது.ஆகையால் ஈ.வே.ரா. பெரியார் அவர்கள் இருவருக்குமிடையே சமரசம் ய்ற்படுத்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் பெரியாரின் சமரச முயற்சியால் எவவித பயனும் ஏற்படவில்லை.

இதனால் எம்.ஜி.ஆர். அவர்கள் புதிய கொடி, புதிய கட்சியென்ற முடிவுக்கு வந்தார். திராவிட முன்னேற்றக் கழக கொடியின் கருப்பு, சிவப்பு கொடியின் மத்தியில் அண்ணாவின் உருவத்தை வெள்ளை நிறத்திலோ பொறித்த கொடியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை கட்சிக்கும் வைத்தார்.

புதிய கட்சின் கொடி தமிழகமெங்கும் பறந்தது. ஆங்காங்கே கட்சியின் கிளைகள் திறக்கப்பட்டன. புதிய கட்சியின் பலத்தை எடுத்துக்காட்டும் விதமாக கட்சியின் பலத்தை எட்டுத்துக்காட்டும் விதமாக சென்னையில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். அன்றைய பேரணியின் போது, கருணாநிதி அரசு மீது ஊழல் பட்டியல் தயார் செய்து கவர்னரிடம் சமர்ப்பித்தார்.

அக்டோபர் 17-ம் தேதியன்று துவங்கப்பட்ட அக்கட்சியானது தமிழக மக்களிடையே நாளுக்கு நாள் பெரும் செல்வாக்குடன் விளங்கியது. அ.தி.மு.க. ஆரம்பித்த குறுகிய காலத்தில் திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு மாயத்தேவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நடைபெற்ற அத்தேர்தலில் மாயத்தேவர் அமோக வெற்றி பெற்றார். மேலும் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் அ.தி.மு.க. குறுகிய காலத்தில் முக்கிய எதிர்க்கட்சி எனும் அந்தஸ்தை பெற்றது. கட்சியின் வளர்ச்சியைக் கண்ட தி.மு.க.வினர் பலர் அக்கட்சியிலிருந்து விலகி எம்.ஜி.ஆர். ஸ்தாபித்த அண்ணா தி.மு.க.வில் இணையத் தொடங்கினார்.

தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 20 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும் கம்யூனிஷ்டு 3 இடங்களையும் பகிர்ந்து கொண்டன.

இன்னிலையில் ஓயாத உழைப்ப்பின் காரணமாக முதல்வர் எம்.ஜி.ஆரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆகையால் அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

இங்கு அவரது உடல்நிலை சற்றே சீரடைந்தாலும் ஒரு முக்கியமான அறுவை சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவிலுள்ள புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்காக அமெரிக்க இந்திய தூதரகத்தின் மூலமாக ஆண்டிப்பட்டியில் தொகுதி வேட்பாளராக வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிவுகள் எம்.ஜி.ஆர். மற்றும் அவரது கட்சியும் வெற்றிபெற்றதாக அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் ஒன்றாகக் கூடி, எம்.ஜி.ஆரை, மூன்றாம் முறையாக முதல்வராக தேர்ந்தெடுத்தனர். பின்பு உடல்நலம் நன்கு தேறிய எம்.ஜி.ஆர். சென்னை திரும்பி முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார்.

உடல் நலம் தேறி மூன்றாம் முறையாக முதல்வரான எம்.ஜி.ஆர். அவர்கள் தன் உடல்நிலையைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், தமிழக மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்போல் அயராது உழைத்தார்.

இந்நிலையில் தமிழக மக்களின் இதய சிம்மாசனத்தில் கொலுவீற்றிருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் 1987 ஆம் ஆண்டு 25ந் தேதி இயேசுபிரானுக்குரிய கிறிஷ்துமஷ் பண்டிகையன்று இன்னுயிர் ஈந்தார்.

சின்னஞ்சிறு வயதில் பசியோடும், பட்டினியோடும் வறுமையிலேயே வாழ்ந்த எம்.ஜி.ஆர். அவர்கள் பசியின் வேதனையை நன்கறிந்தே வைத்திருந்தார். அதன் பிரதிபலிப்பாகவே இவர் சத்துணவுத் திட்டம் எனும் அருமையான திட்டத்தை கொண்டு வந்து சின்னஞ்சிறார்களின் பசிப்பிணியை போக்கினார். திட்டத்தை சட்டமாக்கியதோடு தன் கடமை முடிந்துவிட்டதென்று எண்ணாத எம்.ஜி.ஆர். அத்திட்டம் சரிவர செயல்படுகிறதா என்பதையும் தீவிரமாக கண்காணித்தார்.

சத்துணவுத் திட்டத்திற்காக குறைந்தது 250 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டது.

மேலும் உணவு உண்ண தட்டுகள், பள்ளிச் சீருடைகள், இலவசப் புத்தகங்கள், எழுதும் நோட்டுகள், பற்பொடி, காலணிகள் என கொடுத்து மாணவர்கள் கற்பதற்குரிய ஊக்கமளித்தார்.

இத்திட்டம் மூலம் சில ஆயிரம் பேர்களாவது வேலை வாய்ப்பு பெற்று ஓரளவு வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கியது.

ஓய்வூதியம் பெறுவோர்கள் காத்துக் கிடந்தது அப்பணத்தைப் பெரும் அவலத்தை தவிர்த்து, அப்பணம் அவர்கள் வீடு தேடி பெறும்படி செய்தார்.

மேலும் விதவைகள் மற்றும் வயதான முதியோர்களுக்கும் உணவு மற்றும் ஊதியம், ஆண்டுக்கு இரு முறை உடை, ரேஷனில் இலவச அரிசி, படித்த பட்டதாரிகளுள் வேலையற்றிருந்தால் அவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல், அரசு ஊழியர்கள் இறந்தால் அவர்கட்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி உத்தரவிட்டார்.

மழையிலும், வெயிலிலும் படாதபாடு பட்டு கைரிக்ஷா இழுக்கும் தொழிலாளர்களைக் கண்டு மனமிரங்கிய எம்.ஜி.ஆர். அவர்கட்கு மழைக்கோட்டுகளை வழங்கியும், வங்கிக் கடன் வழங்கியும் பேருதவி புரிந்தார்.

ரிக்ஷாக்காரன் படத்தை பாராட்டி மத்திய அரசு இவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கி கௌரவித்தது.

இப்பட்டங்கள் எல்லாவற்றையும் விட எம்.ஜி.ஆரால் மிகவும் விரும்பப்படும் பட்டம் தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் 'மக்கள் திலகம்', 'புரட்சித்தலைவர்' போன்ற பட்டங்களையே அவர் பெரிதும் விரும்பினார்.

நன்றி : நாஞ்சில் ஸ்ரீ விஷ்ணு

Leave a Reply