ஜம்மு-காஷ்மீரில் கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக, பாரதிய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயக கட்சிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரு கட்சிகளின் தலைவர்களும் காஷ்மீர் ஆளுநர் வோராவை தனித்தனியாக சந்தித்து அம்மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து நேற்று ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூட்டணி பேச்சுவார்த்தையின் தற்போதையை நிலவரம் குறித்து பாரதிய ஜனதா மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி பிரநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநருடனான சந்திப்பு பற்றி பேசிய பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மாதவ், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் விரைவில் உடன்பாடு ஏற்படும் என கூறினார். குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்டவுடன் காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைக்கப்டும் என மக்கள் ஜனநாய கட்சியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply