சிறிசேனா அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திரமோடி, மார்ச் மாதம் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு இந்தியா வுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது . இதன் ஒருபகுதியாக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமர வீரா சமீபத்தில் இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.

இலங்கை அரசின் இந்த அழைப்பை பிரதமர் நரேந்திர மோடி உடனே ஏற்றுக்கொண்டார். அதன்படி பிரதமர் மோடியின் இலங்கைபயணம் மார்ச் மாதம் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து கொழும்புவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பிரதமர் மோடியின் இலங்கை பயணத்து க்கான தேதிகள் இன்னும் முடிவாக வில்லை. எனினும் மார்ச் 14 மற்றும் 15–ந் தேதிகளில் அவர் இலங்கை பயணத்தை மேற்கொள்ள அதிகவாய்ப்பு உள்ளது' என்று தெரிவித்தார்.

இலங்கைக்கு கடைசியாக கடந்த 1987ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 2008–ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் இலங்கைக்கு சென்றிருந்தாலும், சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அப்போது அவர் சென்றார்.

அந்த வகையில் கடந்த 28 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இலங்கையில் புதிய அதிபராக பொறுப் பேற்ற சிறிசேனாவை, இந்தியாவுக்கு வருமாறு மோடி அழைப்பு விடுத் திருந்தார். அதை ஏற்றுக் கொண்ட சிறிசேனா அடுத்த மாதம் (பிப்ரவரி) 16–ந் தேதி இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சுற்றுப்பயணங்களின் போது இருநாட்டு உறவுகள் குறித்த பேச்சு வார்த்தையுடன் ஈழத்தமிழர் பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு நடத்துவார்கள் என தெரிகிறது.

Leave a Reply