சுதந்திரபோராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் 149வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோதி, அவருடைய காலத்தில் தனித்துவ மிக்கவராக ராய் இருந்தார் என கூறியுள்ளார்.

இதுகுறித்து மோடி டுவிட்டரில், பஞ்சாப் கேசரி லாலா லஜபதி ராய் தனித்துவ மிக்கவர். அவரது பிறந்தநாளில் இந்தியாவின் பெருமைமிகு மகனான ராய்க்கு நான் வணக்கம் செலுத்து கிறேன் என தெரிவித்துள்ளார். பஞ்சாபி எழுத்தாளர் மற்றும் சுதந்திரபோராட்ட வீரரான அவர் பஞ்சாபி கேசரி என அனைவராலும் அழைக்கப் பட்டார்.

பஞ்சாப்பின் சிங்கம் என பொருள்படும் வகையில் ஷேர்-ஈ-பஞ்சாப் என்றும் அவர் அழைக்கப் பட்டார். சைமன் கமிசனுக்கு எதிராக வன் முறையற்ற முறையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் கடுமையாக காய மடைந்த ராய் 1928ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

Leave a Reply