காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க,வும் பி.டி.பி.,யும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்த பேச்சு வார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பி.டி.பி., கூறியுள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங்கை காஷ்மீர் செல்ல கட்சிமேலிடம் கூறியுள்ளது.

மேலும் குஜராத் மாநில பயணத்தை ரத்து செய்து விட்டு காஷ்மீர் செல்ல உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஜிதேந்திரசிங் அங்குசென்று கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தும் அவர், முப்தியை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply